மதுரை: நீட் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக நிறுவனரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் மீது மதுரை கரிமேடு காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர் பேசிய யூடியூப் பக்கத்தை முடக்கவும் உள்ளனர். ஏற்கனவே இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை மாநகர் பகுதியில் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை