மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்தவர் சிந்தாமணி(24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாய்மாமன் உறவு முறையான கட்டட தொழிலாளர் சக்திவேல் என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் மலர்ந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இருவரும் கட்டட வேலைக்கு சென்று வந்த போது பழக்கம் அதிகமானது. இதைத் தொடர்ந்து சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி அவருடன் அடிக்கடி உறவு வைத்துள்ளார். பின்னர் சிந்தாமணியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிந்தாமணி, மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சக்திவேலை பாலியல் வழக்கில் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க; மேட்ரிமோனி மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்!