ETV Bharat / city

அன்று பிரதமர் மோடி பாராட்டு... இன்று ஐநா மாநாட்டில் உரை! - nethra speaks in UN conference

மதுரை: ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட யுஎன்ஏடிஏபி தன்னார்வ நிறுவனம், முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ராவை உலக ஏழைகளின் நல்லெண்ண தூதுவராக அறிவித்தது. இதையடுத்து நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பாலின சமத்துவம் குறித்த மாநாட்டில் காணொலிக் காட்சி மூலமாக நேத்ரா முதல்முறையாக உரையாற்றினார்.

barbers daughter nethra speaks in UN headquarters conference

author img

By

Published : Jul 25, 2020, 3:58 PM IST

கடந்த மே மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' (மன்கி பாத்) என்ற நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் கரோனா கால மனிதநேய சேவை குறித்து புகழ்ந்து பேசினார். மோகன் என்னும் அந்த நபர் தனது மகள் நேத்ராவின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவியதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இதனையடுத்து மோகனின் மகள் நேத்ராவை ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட யுஎன்ஏடிஏபி என்ற தன்னார்வ நிறுவனம், உலக ஏழைகளின் நல்லெண்ண தூதுவராக அறிவித்து சிறப்பு செய்திருந்தது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக ஏழைகள், பெண்கள், குழந்தைகள் குறித்து நடைபெறும் மாநாடுகளில் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுத்திருந்தது. தற்போது கரோனா தொற்று காரணமாக உலக அளவில் நடைபெறும் பல்வேறு கருத்தரங்குகள் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றுவருகின்றன.

நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் 'பாலின சமத்துவத்தை உணரச் செய்தல் மற்றும் அனைத்துப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகாரம் பெறுதல்' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 21ஆம் தேதி இம்மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் உரையாற்றும் நேத்ரா

அதில், காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று மதுரையிலிருந்து பேசிய மாணவி நேத்ரா, இந்திய அரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலன் சார்ந்து கொண்டுவரும் பெண் குழந்தைகள் கல்வி (Beti Bachao Beti Padhao) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படுவது ஆகியவை குறித்தும் பேசினார். பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை மத்திய அரசு 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரித்தது குறித்தும் அந்த உரையில் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க... 'நிற்க அதற்கு தக' - குறளாய் எதிரொலிக்கும் நேத்ராவின் குரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.