ETV Bharat / city

சோலார் மிதிவண்டி: அமெரிக்கன் கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

சூரிய சக்தியில் இயங்கும் பல்நோக்கு பயன்பாடுள்ள மிதிவண்டியை ஒன்றை மதுரை அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை மாணவர் தனுஷ் குமார் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பலரது பாராட்டைப் பெற்றுள்ள மாணவர் தனுஷின் இந்த கண்டுபிடிப்பு குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

american college student solar cycle innovation, american college student new innovation, solar cycle innovation, அமெரிக்கன் கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு, சோலார் மிதிவண்டி, சோலார் சைக்கிள், தமிழ்நாடு கண்டுபிடிப்புகள், தமிழன் கண்டுபிடிப்புகள், tamilnadu innovations, tamilan innovations
american college student solar cycle innovation
author img

By

Published : Nov 29, 2020, 12:32 PM IST

Updated : Dec 2, 2020, 10:00 PM IST

மதுரை: உலக நாடுகள் அனைத்தும் மரபுசாரா எரிசக்தி குறித்து பல்வேறு வகையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆங்காங்கே ஒரு சில தனிநபர்களின் கண்டுபிடிப்புகள் புதிய நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிக மாசை உமிழும் டீசல் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடிய சூழலில், இதுபோன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மனிதர்கள் பாராட்டுக்குரியவர்கள் தான்.

அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை மாணவரான தனுஷ் குமார், தனது புதிய கண்டுபிடிப்பாக சூரிய மின்சக்தியால் இயங்கும் மிதிவண்டியைக் கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் 30 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல், சூரிய மின்சக்தியினால் மின்கலத்தில் சேமிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டு கூடுதலாக பயணத்தை மேற்கொள்ள முடியும்.

தன்னம்பிக்கை நாயகன்! காளான் வளர்ப்பில் அசத்தும் சேலம் இளைஞர்

இது இரண்டும் இல்லாத பட்சத்தில், கால்களைக் கொண்டு மிதிவண்டியை செலுத்தலாம். இப்படியான கண்டுபிடிப்புகள், இயற்கைக்கு முற்றிலும் உகந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முழு வடிவத்துக்கான முயற்சிகளை கண்டுபிடிப்பாளர்கள் மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக அமைகிறது.

american college student solar cycle innovation, american college student new innovation, solar cycle innovation, அமெரிக்கன் கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு, சோலார் மிதிவண்டி, சோலார் சைக்கிள், தமிழ்நாடு கண்டுபிடிப்புகள், தமிழன் கண்டுபிடிப்புகள், tamilnadu innovations, tamilan innovations
சூரியசக்தி மிதிவண்டியைக் கண்டுபிடித்த தனுஷ் குமார்

இந்த கண்டுபிடிப்பு குறித்து பேசிய மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பிற மாணவர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக திகழ கூடியவர் மாணவர் தனுஷ் குமார். வெறும் படிப்புடன் இல்லாமல் அதைத் தாண்டிய தனது சிந்தனையை இந்த கண்டுபிடிப்பின் மூலமாக செயல்படுத்திக் காட்டியுள்ளார். சூரிய சக்தி, மின்கல சேமிப்புத் திறன், மனித ஆற்றல் என மூன்று தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இந்த மிதிவண்டி இயங்குமாறு அவர் கண்டுபிடித்துள்ளது மிகவும் பாராட்டிற்குரியது.

அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அந்தத் துறையிலிருந்து இதுபோன்ற கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது பெருமைக்குரியது. மாணவர் தனுஷ் குமாரின் இந்த கண்டுபிடிப்பிற்கு கல்லூரி சார்பாக காப்புரிமை பெறுகின்ற முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து பேசுகிறார்

முதல் கண்டுபிடிப்பாக சூரிய சக்தியில் இயங்கும் இந்த சைக்கிள் இருந்தாலும் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அவற்றை எல்லாம் வெளிக்கொண்டு வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் மாணவர் தனுஷ் குமார்.

மேலும் அவர் கூறுகையில், “சூரிய மின்சக்தி மூலமாக 30 கிலோமீட்டர் சாதாரணமாக இதில் பயணம் செய்ய முடியும். அதன் பிறகு பேட்டரி மூலமாக இயக்கலாம். அதன்பிறகு மேற்கண்ட இரண்டும் தீர்ந்து போனாலும் கூட, பெடலிங் முறையில் நமது பயணத்தை தடையின்றி தொடரும் வகையில் இந்த மிதிவண்டியை நான் வடிவமைத்துள்ளேன்”

வேப்ப மரத்தை பாதுகாக்கும் குழந்தைகள்

“சின்ன சின்ன முயற்சியின் மூலமாக பெரிய விஷயங்களை சாதிக்க முடியும் என்பதற்கு என்னுடைய இந்த கண்டுபிடிப்பே பிற மாணவர்களுக்கு உதாரணமாக திகழும்” என்கிறார்.

இயற்பியல் துறையின் தலைவரும் பேராசிரியையான டாஃப்னி மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து பேசுகிறார்

இயற்பியல் துறையின் தலைவரும் பேராசிரியையான டாஃப்னி கூறுகையில், இன்று உலகம் முழுவதும் கரியமில வாயு வெளியேற்றம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் சூரிய ஆற்றலை கொண்டு எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு முன்னுதாரணமாகும். எங்களது கல்லூரியில் புற சூழல்கள் மாணவர்களை வித்தியாசமாகவே சிந்திக்க வைக்கும். முதலாம் ஆண்டிலேயே இயற்பியல் பாடத்தில் எனர்ஜி ஃபிசிக்ஸ் என்ற பாடத்தின் மூலமாக மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றல்களை ஊக்குவிக்கிறோம். அந்தப் பாடம் தந்து ஊக்குவிப்பின் மூலமாக தனுஷ் குமார் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது என்கிறார்.

சோலார் மிதிவண்டி: அமெரிக்கன் கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

மரபுசாரா எரிசக்தி வளம் இந்தியாவில் மிகப்பெரும் அளவில் கிடைக்கிறது. ஆனால் அதனை மிக வித்தியாசமான கண்டுபிடிப்புகளின் மூலமாக இவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்கு மாணவர் தனுஷ் குமாரின் சோலார் சைக்கிள் அறிவியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறும் அவரை ஊக்குவித்த அமெரிக்கன் கல்லூரிக்கும் அதன் இயற்பியல் துறை பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்காமல் இருக்க முடியுமா என்ன..?

Last Updated : Dec 2, 2020, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.