மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி பிரிட்டோ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "சத்தீஸ்கரைச் சேர்ந்த 33 பேர் சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்த தகவல் கிடைக்கப்பெற்றது.
விருதுநகர் வருவாய் அலுவலர் உதவியால், 33 பேரும் மீட்கப்பட்டனர். மீட்கப்படுவோருக்கு விதிப்படி விடுவிப்புச் சான்றிதழும், 20 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை அவர்களுக்கான விடுவிப்புச் சான்றும், இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, சிவகாசியில் மீட்கப்பட்ட 33 பேருக்கும் சான்றிதழ், இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: டாஸ்மாக்கிற்கு உள்ள முக்கியத்துவத்தை அரசு இதற்குத் தருமா?