ETV Bharat / city

வெளிச்சத்திற்கு வராத பல ஜெய்பீம் கதைகள்; போலீசாரின் சித்ரவதைக்குத் தொடர்ந்து ஆளாகும் வேதனை நிறைந்த ஆதிப்பழங்குடியின சமூகம்!

author img

By

Published : May 15, 2022, 10:37 PM IST

Updated : Oct 11, 2022, 1:19 PM IST

போலீசாரின் சித்ரவதைக்கு ஆளாகும் ஆதிப்பழங்குடியின குறவர் சமூக மக்களின் அவல வாழ்க்கை இன்றும் மாற்றமின்றி தொடரும் நிலையில் பொது சமூகத்தின் கவனத்திற்கே வராத ஜெய்பீம் திரைப்பட- ராசா கண்ணு போன்று நிறைய பேரின் நிலை உள்ளதாக வெளியான புள்ளிவிவர அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு தொகுப்பு
சிறப்பு தொகுப்பு

மதுரையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'போப்' என்ற தொண்டு நிறுவனம், சமீபத்தில் தமிழ் இனத்தின் ஆதிப்பழங்குடிகளான 'குன்றக் குறவர்கள்' என்றழைக்கப்படும் குறவர் சமூகத்தின் வாழ்நிலை குறித்து புள்ளி விவரம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

மேலும் அவர்களின் அவல வாழ்வு குறித்த ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்து வெளியீடு செய்துள்ளது. தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 30 நபர்களைத் தேர்வு செய்து, அவர்கள் மீது காவல் துறையால் ஜோடிக்கப்பட்ட மற்றும் பதியப்பட்ட திருட்டு பொய் வழக்குகள் மற்றும் சித்ரவதை தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதன்முடிவில், தேர்வு செய்யப்பட்ட நபர்கள் கொடுத்த தகவல் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின் முடிவில் இந்நபர்கள் மீது மொத்தமாக பதியப்பட்ட 549 வழக்குகளில் 262 வழக்குகளில் விடுதலையும், 38 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும், மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

மேற்படி இது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் குற்றங்கள் காவல் துறையினரால் நிரூபிக்கப்படாமல் பலர் விடுதலையும் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போப் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜெயசுதா இது குறித்து கூறுகையில், 'போப் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக குறவர் சமூக மக்களிடையே பணியாற்றி வருகிறது. அந்த மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் காவல் சித்திரவதைகளை, நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம்.

குறவர் சமூகத்திலுள்ள அடுத்து வருகின்ற இளம்தலைமுறைக் குழந்தைகளையும் அவர்களது சித்ரவதை விட்டு வைக்கவில்லை என்பதுதான் இதில் வேதனைக்குரியது. சிறு குழந்தைகள் மீதும்கூட பொய் வழக்குப் போடுகின்ற அவலநிலை நீடித்துக்கொண்டே வருகிறது.
எங்களது ஆய்வுக்காக பாதிக்கப்பட்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்கள் மீதும் 549 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 38 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். போலீசாரின் பொய் வழக்கு காரணமாக, குறவர் சமூக மக்கள் தங்களது வீட்டில் வாழாமல் வேறு எங்காவது பயந்து ஒளிந்து வாழ்கின்ற சூழல் உள்ளது' என்று மனம் வருந்தினார்.

ஒருமுறை திருட்டு வழக்கில் காவல் துறையிடம் சிக்கிவிட்டால் அக்குடும்பம் மண்ணுக்குள் போகிறவரைத் தப்ப முடியவில்லை. குறவர் மீதான தாக்குதல்களான அடிப்பது, காயப்படுத்துவது, வீடு புகுந்து அங்கிருக்கும் பண்ட பாத்திரங்கள், அவர்களின் சேமிப்புப் பணம், பெண்களின் காது, மூக்கில் இருக்கும் அணிகலன்கள் மற்றும் குடும்ப அட்டை வரை குறைந்த பட்ச பொருள்களையாவது தூக்குவது, உற்றார் உறவினர் மீது வழக்குப்போடுவது, சிக்கிக்கொண்டவனின் குடும்பப் பெண்களை அவமானப்படுத்துவது, அவர்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது, சிறுவன், சிறுமி என்றும் பார்க்காது மூர்க்கத்தனமாகத் தாக்குவது என எல்லையற்ற பலக் கொடுமைகள், பொய் வழக்குகள், சிறைக் கொட்டடி சித்திரவதைகள் (Lock-up torture) என குறவரின பழங்குடி மக்கள் மீதானக் கொடுமைகள் ஏராளம் எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆதிப் பழங்குடியின மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள கரைகளை களைய அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?

குடும்பத்தாருக்கு நிகழும் சோகத்தினாலேயே படிப்பைத் துறக்கும் இளம்தலைமுறையினர்: மேலும் இதுகுறித்து ஜெயசுதா கூறுகையில், 'குறவர் சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்வியிலும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், படிப்பைத் தொடர முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். "ஜெய்பீம்" படம் வெளியானதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர், குறவர், கல் ஒட்டர், இருளர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் வாழ்கின்ற மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், அந்த மக்கள் வேண்டுவது சுயமரியாதையுடனான வாழ்க்கையே ஆகும். பொய் வழக்குகளைப் போடாது இருத்தல், தங்களது குழந்தைகளின் வாழ்க்கைப் பிற சமூகத்தாரைப் போன்று சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான். ஜெய்பீம் படத்திலும் கூட காவல் சித்ரவதை தான் மையமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆய்வுக்குழு அமைத்து அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்கிறார்.

"குன்றவர்கள்"-ஆக இருந்தவர்கள் குறவர்களாக்கப்பட்ட பின் எதிர்கொண்ட சுரண்டல்: கருஞ்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் கேப்டன் துரை கூறுகையில், ’தமிழ்ச் சமூகத்தின் ஆதிக்குடிகளே இந்தக் குறவர்கள்; குன்றவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே குறவர்களாகப் பின்னர் திரிந்தனர். விவசாயத்தை மட்டுமன்றி வேட்டைக் கருவிகளான வில், அம்பு ஆகியவற்றைக் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்களும் அவர்கள்தான். முருகன், வள்ளி என்ற வழிபாட்டு அடையாளங்களும் குறவர் சமூகம் தந்த கொடைதான். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட குறவர் சமூகம் ஆங்கிலேயே ஆட்சிக்குப் பிறகுதான் மிகப்பெரும் வீழ்ச்சியைக் காணத் தொடங்கியது.

மலைகளிலுள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக, 1872ஆம் ஆண்டில் வனச்சட்டத்தை இயற்றி குறவர் மக்களை அவர்தம் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றி நாடோடிகளாக மாற்றிவிட்டனர். அவர்களால் இயற்றப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தாலும் குறவர் மக்கள் கடுமையானப் பாதிப்பிற்கு ஆளாயினர். விடுதலைப் பெற்ற இந்தியாவும் அதே சட்டத்தைப் பின்பற்றியதுதான் வரலாற்றுச் சோகம்' என்று விவரிக்கிறார்.

திட்டமிட்டு குற்றவாளிகளாகக் கட்டமைக்கப்பட்ட "குறவர் சமூகம்": வெவ்வேறு கட்டங்களாக கி.பி.1871, 1876, 1897, 1911, 1924 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட இச்சட்டங்கள் வாயிலாக, குறவர் மக்களை அரசு கண்காணித்து வந்தது; அதன் பின் ஒடுக்கியது. குறவருக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட இச்சட்டங்கள் குறவரினத்தைச் சார்ந்த அனைவரையும் பாதித்தன. அவர்களின் உரிமைகளையும் அவை நசுக்கின. எங்காவது ஓரிடத்தில் திருட்டு நடந்திருந்தாலும், திருட்டு நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் குறவர்களைப் பிடித்து, சிறையில் அடைத்து உண்மைக் குற்றவாளிகள் பிடிபடும் வரை குறவரையே குற்றவாளியாகக் கருதிப் போலீசார் வதைப்பதை வாடிக்கையாக செய்து வந்தனர்.

குறவர்களின் கட்டைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழப் பலவந்தப்படுத்தப்பட்டனர். செய்த குற்றங்களுக்கேற்ப காவல் நிலையத்தில் இரவிலோ அல்லது வாரத்திற்கு இரு முறையோ குறவர்கள் தம்மை ஆஜர்படுத்தியும் வந்துள்ளனர். குறவர் இனப் பழங்குடிகள் சந்திக்கும் மிகமுக்கிய சிக்கல்களில் அவர்கள் மீது போடப்படுகிற திருட்டு, கொள்ளைத் தொடர்பான வழக்குகளாகும்.

3 பிரிவுகளில் ஒரே சமூக மக்கள்: மேலும் இதுகுறித்து கேப்டன் துரை கூறுகையில், 'சொந்த மண்ணிலே அகதிகளாக வாழுகின்ற அவலநிலை தற்போது குறவர் சமூகத்திற்குத் தொடர்கிறது என்பது மிகப் பெரும் துன்பமாகும். சுமார் 30 லட்சம் மக்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று தமிழ்நாடு தாண்டி, பல்வேறு மாநிலங்களில் குறவர் சமூக மக்கள் பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர். பிற சமூக மக்களுக்குத் தேவையான கைவினைப் பொருட்களையும் செய்து தருவதுடன், மூலிகைப் பொருட்களையும் விளைவித்து தருவதே இவர்களது தொழிலாக இருந்து வருகிறது. ஒரே சமூக மக்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் எம்பிசி (SC/ST and MBC) என மூன்றுவிதமான பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்' என்கிறார்.

தேசிய பழங்குடிகள் ஆணையம் அளித்த பரிந்துரைகள்: இதுபோன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகும் சமூக மக்களுக்கு தமிழ்நாடு அரசால் உடன் செயல்படுத்தக்கூடிய உதவி எண்கள் அறிவிக்கப்பட வேண்டும். காவல் துறையைச் சேர்ந்த நபர்கள் இல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு இந்த எண்களை நிர்வகிக்க வேண்டும். தேசிய பழங்குடிகள் ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி சில பரிந்துரைகளை அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியது. இந்தப் பரிந்துரையை ஏற்று இந்திய குடியரசுத்தலைவர், அம்மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, நீதி, நிவாரணம் ஆகியவை உரிய வகையில் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளார்.

காவல் துறையினரின் பணிச்சுமைக்கு குறவர் இன மக்களை பலிகடா ஆக்கும் போக்கு ஒழியவேண்டும்: இந்தப் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். பட்டியலின மக்களுக்கான ஆணையம் ஒன்று தமிழ்நாடு அளவில் உருவாக்கப்பட வேண்டும். அவர்களில் யாரேனும் கைது செய்யப்படும்போது, பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து டி.கே.பாசு அளித்துள்ள 11 வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். மேலும், காவலர்களின் பணிச்சுமையே இதுபோன்ற சித்ரவதைகளுக்கு காரணம் என்பதால், அதற்குரிய செயல்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

வளர்ச்சியடந்த சமூகத்தை நோக்கிய பயணத்தில் இம்மக்களின் பங்கும் அவசியம்: தமிழர்களின் ஆதிப் பழங்குடிகளான குறவர் சமூக மக்களின் அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காதவரையில், பொது சமூகத்தின் நாகரிக வாழ்க்கை முறையும் கூட கேள்விக்குரியாகவே இன்றளவும் இருக்கும். இதற்கு காவல்துறை மட்டுமன்றி, மாநில, ஒன்றிய அரசுகளும்தான் பொறுப்பேற்று அவர்களின் வாழ்வில் அனுபவிக்கும் சித்ரவதைகளைத் தடுக்கப்பதற்கு ஆவண செய்யவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

நோயாளிடம் சிகிச்சையின் அவசியத்தை உணர்த்துவது போல, கல்வி அறிவின் அவசியத்தை இம்மக்களுக்கு உணர்த்தவேண்டும்: இது வரையில் இம்மக்களுக்கு நடந்த கொடுமைகளும் துயரங்களும் இனியாவது, முடிவுக்கு வரவேண்டும். அதேவேளையில் தங்களுக்கு நடந்த அவலங்களையும் சித்ரவைதைகளையும் தவிர்க்க இனிவரும் தலைமுறைகளை சமூகத்தில் நிலையான அந்தஸ்தைப் பெருவதற்கு எடுக்கும் முயற்சியாக தங்களின் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பவேண்டும். அவ்வாறு கல்வியறிவு பெற்று விட்டால் தங்களுக்கு நடக்கும் இன்னல்களை தாங்களே நீக்கிக்கொள்ள நல்ல வழிப் பிறக்கும் என்பதை உணரவேண்டும். அதற்காக இந்த ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதையும் படிங்க: 'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்' - நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் பேச்சு!

Last Updated : Oct 11, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.