மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு செய்துள்ளனர். அதில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதி முறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2013 முதல் 17 வரை அதிக ஆள் ஏற்றியதாக 27751 மீட்டர் இல்லாமல் இயக்கியதாக 10286 ஆட்டோ சீட் மாற்றி அமைத்து இயக்கியதாக 2354 மேலும் பல்வேறு விதிகளை மீறியது என மொத்தம் 156468
வழக்கு பதிவ பதியப்பட்டது.
இதில் அபராத தொகையாக 2 கோடி ருபாய் வசூலிக்கப்பட்டுள்ளது மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது முறையான அனுமதி உடன் 1911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் வட்டார போக்கு வரத்து சார்பில் கடந்த 2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் விதிமீறியது தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. இதில், வழக்கு பதியப்பட்ட 694 ஆட் டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறி முதல் செய்யப்பட்டன.
அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயரத்து 850 வசூலிக்கப்பட்டது. பயணிகளின் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்ப டுத்தவும் தொடர் நடவ டிக்கைகள் எடுக்கப்ப டுகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு அமல்