தனியார் ஊடக நிறுவனங்கள் முகநூல் வலைதளத்தில் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கங்களை உருவாக்கி அதன் மூலம் வீடியோ, ஆடியோ செய்திகளை பதிவேற்றம் செய்து தங்களது பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்த தொகுப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதற்கென முகநூல் நிறுவனம் ரைட்ஸ் மேனேஜர் என்ற ஒரு வசதியை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறது. இதிலுள்ள தரவுகளைப் பயன்படுத்தி தவறாக, சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்துகின்ற நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, முகநூல் நிறுவனத்துக்கு மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் என்பவர் அறிவுரையாக வழங்கியிருந்தார்.
மதுரை தவிட்டு சந்தை பகுதியைச் சேர்ந்த கிஷோர், தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். அவரின் ஆலோசனையை ஏற்ற முகநூல் நிறுவனம் அந்த குறைபாட்டை உடனடியாக சரி செய்தது. இதைத்தொடர்ந்து, தங்களது நிறுவனத்துக்கு தேவையான ஆலோசனையை வழங்கிய மாணவருக்கு அமெரிக்க மதிப்பில் ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை முகநூல் நிறுவனம் அனுப்பி வைத்தது. இது இந்திய மதிப்பில் 77 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதனிடையே, முகநூலில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய மதுரை கல்லூரி மாணவருக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.