ETV Bharat / city

ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலம்: மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவு - திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்

கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற இரண்டு குழுக்களை நியமிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலம்

author img

By

Published : Jul 30, 2021, 7:30 PM IST

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தூத்துகுடி மாவட்டம், நகர் சங்கர இராமேசுவரர், வைகுண்டபதி பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் பாதுகாக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முறையான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு முன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். எனவே, கோயிலுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்து்களுக்கும் சார்நிலைக் கருவூல அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுவந்த அலுவலர்கள் மீது உரிய குற்றவியல் வழக்குப்பதிவு செய்து விரிவான புகாரினை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் காவல் துறையில் வழங்கப்பட உத்தவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்தக் கோயில் நிலத்தை மீட்பது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவு மிகவும் மெதுவாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது.மூன்று ஆண்டுகள் முழுமையாகியுள்ளது. இந்த உத்தரவு மிகவும் மெதுவாக அமல்படுத்தப்பட்டுவருகிறது.

தற்போதைய தகவலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 40,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோயில் நிலத்தை மீட்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக. முன் வந்து விசாரணைக்கு எடுத்து, கோயில் நிலத்தை மீட்பது தொடர்பாக பல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவுகளையும், ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கனவே இந்த வழக்கில் நீதிமன்றம் பிறத்த உத்தரவுகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கோயில் நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரண்டு குழுக்கள் அமைத்து மீட்க வேண்டும்.

கோயில் நிலம் தொடர்பான சொத்துகளையும், ஆக்கிரமிப்பு குறித்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்துவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.