ETV Bharat / city

Smuggle Ivory: யானைத் தந்தம் கடத்தலில் கைதான 4 பேருக்கு கரோனா பாதிப்பு

Smuggle Ivory:யானைத் தந்தங்களுடன் கைதான 9 பேரில் 4 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Smuggle Ivory
Smuggle Ivory
author img

By

Published : Jan 24, 2022, 11:04 PM IST

தேனி: Smuggle Ivory: பெரியகுளம், வத்தலகுண்டு சாலையில் யானைத் தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயல்வதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கு வந்த தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின்பேரில், தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜ் மற்றும் பெரும்பல்லம் வனச்சரக அலுவலர் தலைமையில் 25க்கும் மேலான வனத்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தந்தங்களுடன்...

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் காட்டிற்குள் கும்பலாகச் சுற்றித் திரிந்தவர்களை சோதனை செய்ததில் 2 யானைத் தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது பெரும்பல்லத்தைச் சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை யானைத் தந்தம் விற்பனை கும்பல் அடித்துத் தள்ளி விட்டத்தில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வனத்துறை நடவடிக்கை

மேலும், யானைத் தந்த விற்பனையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் என்பவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து 2 யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானபட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராசு (30), முத்தையா (57), உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 30), விஜயக்குமார் (60) மற்றும் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி வனச்சரக அலுலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனக்காவலரை அடித்துத் தள்ளிவிட்டுத் தப்பி ஓடிய சுரேஷ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

ஐடியா கேட்டு வேட்டை

மேலும் இது தொடர்பாக தேவதானபட்டி வனச்சரக அலுவலர் கூறுகையில், இதில் தொடர்புடைய ஒருவர் முன்னால் வனத்துறை அலுவலரிடம் யானைத் தந்தங்கள் விலை பற்றி தொலைபேசியில் கேட்டுள்ளார்.

அது பற்றி, ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 10 நாள்களாக தேவதானப்பட்டி மற்றும் பெரும்பல்லம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறைதொடர்ந்து கண்காணித்து யானைத் தந்தம் விற்பனை கும்பலைப் பிடித்ததாகக் கூறினார்.

கரோனா தொற்று உறுதி

இதையடுத்து அவர்கள் 9 பேர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தி பெரியகுளம் கிளைச்சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 4 பேர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காகப் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களை கைது செய்த தேவதனப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.