மதுரை, பாண்டி கோயில் ரிங்ரோடு அருகே அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் இருந்த போது, சந்தேகத்துக்குரிய வகையில், சென்ற மூன்று இளைஞர்களைப் பிடித்து, விசாரித்த போது அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேற்கொண்டு விசாரணை செய்த காவல் துறையினர் அவர்கள் மீது மதுரை மாநகர்ப் பகுதியில் 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சக்கிமங்களம் பகுதியைச் சேர்ந்த ஆதிஸ்வரன், கார்த்திக் கண்ணன் மற்றும் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா ஆகிய 3 பேரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 16 சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:
ஒரு மணி நேரத்தில் வழிப்பறி கும்பலை மடக்கிப் பிடித்த காவல் துறையினர்!