ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட்டுடன் வெளிநாட்டிலிருந்து வந்து பெண் ஒருவர் தங்கியிருப்பதாக மாவட்ட கியூ பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு காவல் துறையினர் நேற்று(செப்.20) முகாமிற்கு நேரில் சென்று சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் பிரதிபா என்னும் இளம்பெண் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவலில் வைத்துள்ளனர். மேலும் அவர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இலங்கை அகதி பெண்களுக்கு கரோனா நிவாரணம்