வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்குப் பின் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இதில் வனக் காவலர், வனக் காப்பாளர், சமூக ஆர்வலர் என ஐந்து பேர் கொண்ட குழுக்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டன. சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச்சரங்களில் 380 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.
யானை தாக்கி இருவர் உயிரிழப்பு
விளாமுண்டி வனச்சரகத்தில் ஒரு குழுவினர் கல்லாம்பாளையம் வனத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த யானை தாக்கியதில் வனக்காவலர் சதீஸ், சமூக ஆர்வலர் முத்துபிரபாகரன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் வனக்காப்பாளர் பொன். கணேஷ் காயமடைந்தார். இருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் அருண்லால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - நீரில் மூழ்கிய தரைப்பாலம்!