ETV Bharat / city

கோடை விடுமுறைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் - three drown in Bhavani river

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவி உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

three-including-a-college-student-drowned-in-keel-bhavani-canal

author img

By

Published : Mar 14, 2022, 7:16 AM IST

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கோடை விடுமுறைக்காக நேற்று ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி நீர்த்தேக்க பகுதிக்கு வேனில் சென்றனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நம்பியூர் சாலையிலுள்ள கூடக்கரை கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுகுளித்தனர்.

அப்போது பத்தாம் வகுப்பு மாணவர் விஜய் என்பவர் முதலில் வாய்க்காலில் இறங்கி மூழ்கினார். இவரை காப்பாற்ற தாய் சிவதேவி மற்றும் கல்லூரி மாணவி ஷாலினி இருவரும் வாய்க்காலில் குதித்தனர். ஆனால் மூவரும் நீரின் வேகம் காரணமாக அடித்துச்செல்லப்பட்டனர்.

இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.