ஈரோடு: எழுமாத்தூர் கனககிரிமலையில் கனகாசலக்குமரன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி கோயிலில் இருந்த 6 மணிகள், எல்இடி டிவி ஆகியவை திருடுபோனது. இது குறித்து தகவலறிந்த அரச்சலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் காலையில் கற்பூரம் ஏற்றிவிட்டு அங்க பூஜை செய்த 45 வயது மதிக்கத்தக்க நபர் கோயில் வளாகம் முழுவதும் சுற்றி நோட்டமிட்டுள்ளார். பிறகு இரவு நேரத்தில் சென்றவர், ரம்பம் வைத்து கோயில் பூட்டை அறுத்துள்ளார். பிறகு கோயிலில் இருந்த 6 மணிகள், எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
காலையில் வந்த நபர் இரவில் வரும்போது அதே கைக்கடிகாரம் கட்டியிருந்தது அவரை காட்டிக்கொடுத்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளங்களை வைத்து அரச்சலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடனை திருப்பி கேட்ட பேராசிரியர்: ஆபாச படம் எடுத்து மிரட்டிய 4 பேர் கைது