ETV Bharat / city

கரோனா வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய துப்புரவு பணியாளர்கள்!

author img

By

Published : Apr 1, 2020, 11:19 PM IST

ஈரோடு: சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி புஞ்சைபுளியம்பட்டியில் தூய்மை பணியாளர்கள் கரோனா வேடமிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரோனா போல வேடமிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய துப்புரவு பணியாளர்கள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நிற்பதால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்றிருந்தனர்.

அப்போது புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேர் கரோனா வைரஸ் வேடமிட்டு, கரோனா வைரஸ் வடிவ பொம்மைகளை கையில் ஏந்தியபடி காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் சென்று சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரோனா போல வேடமிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு

வித்தியாசமான முறையில் கரோனா வைரஸ் வேடமணிந்து தூய்மைப் பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.