ETV Bharat / city

ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு - ஜிஎஸ்டி வரி விதிப்பு

ஜவுளிக்கான ஜிஎஸ்டி (சரக்கு - சேவை வரி) உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் இன்று (டிசம்பர் 10) நான்காயிரம் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி கடைகள் அடைப்பு
ஜவுளி கடைகள் அடைப்பு
author img

By

Published : Dec 10, 2021, 3:48 PM IST

ஈரோடு: ஜவுளி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சமீபகாலமாக நூலின் விலை ஏற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறியாளர்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துள்ளனர். சில இடங்களில் ஜவுளி உற்பத்தியைக்கூட நிறுத்திவிட்டனர். நூல் விலையை ஒழுங்குமுறைப்படுத்திட வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர். இதன்பின்னர் நூல் விலை சீரானது.

ஜிஎஸ்டி வரி உயர்வு

இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பேரிடியாக சரக்கு - சேவை வரி ஐந்து விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான ஜவுளி தொழில்கள் கடும் இழப்பைச் சந்திக்கும் சூழ்நிலை நிலவியது. இந்த சரக்கு - சேவை வரி உயர்வுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

சரக்கு - சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் இன்று ஒருநாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜவுளிக் கடைகள் அடைப்பு

அதன்படி இன்று ஈரோட்டில் அனைத்து ஜவுளிக் கடைகள் குடோன்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகரில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, என்.எம்.மஸ். காம்பவுண்ட், அகில் மேடை வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஜவுளிக் கடைகள் அடைப்பு

ஈரோட்டில் நான்காயிரம் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளிச் சந்தை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஜவுளிச் சந்தையில் உள்ள 272 தினசரி ஜவுளிக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து விசைத்தறி உற்பத்தியை ஒருநாள் நிறுத்தியுள்ளனர். இந்தக் கடை அடைப்பு காரணமாக 50 கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது.

இதனையடுத்து செய்தியாளரைச் சந்தித்த கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், ”மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள், தொடர்ந்து உயர்த்தப்படும் நூல் விலை, கரோனா பரவல் தடுப்பூசிக்கான பொதுமுடக்கம் போன்ற காரணத்தால் ஜவுளி சார்ந்த அனைத்துத் தொழில்களும் முடங்கிப்போயின.

ஜவுளி தொழிலில் இழப்பு

இதில் விசைத்தறி, டையிங், பிரிண்டிங், பிளீச்சிங், காலண்டரிங், ஆயத்த ஆடை உள்ளிட்ட பிற ஆடை தயாரிப்பு, ஜவுளி விற்பனை என அனைத்து நிலைகளிலும் ஆர்டர்கள் பெற்று, குறைந்தபட்ச லாபம்கூட ஈட்ட முடியாமல், கடும் இழப்பைச் சந்திக்கிறோம். இந்நிலையில் ஜவுளிக்கான, ஐந்து விழுக்காடு சரக்கு - சேவை வரியை, 12 விழுக்காடாக உயர்த்தியுள்ளனர்.

இதனால், அனைத்து வகையான ஜவுளித் தொழில்களும் மேலும் இழப்பையும், சிக்கலையும் சந்திக்கும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜவுளி விலை உயரும். ஜவுளி தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளதால், நூல் விலையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும்.

சரக்கு - சேவை வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகையான ஜவுளி சார்ந்த நிறுவனங்களும் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிங்க: நீலகிரியில் கடைகள் அடைப்பு - இறந்த ராணுவ அலுவலர்களுக்கு மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.