ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வாரச்சந்தை கரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 23ஆம் தேதி மூடப்பட்டது. இவ்வாறு, நோய்த்தடுப்பு நடவடிக்கை காரணமாக தொடர்ந்து மூடப்பட்ட வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை (அக்.13) திறக்கப்பட்டது.
ஆனால் வாரச் சந்தைக்கு வந்து பொருள்கள் வாங்க பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டாததால் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வணிகர்களும் வாரச்சந்தைக்கு வராததால் சந்தை பொலிவிழந்து காணப்பட்டது.
இந்நிலையில், வரும் வாரங்களில் வாரச் சந்தைக்கு வணிகர்களும் பொதுமக்களும் வர வாய்ப்புள்ளதாக நகராட்சியினர் தெரிவித்தனர். இதற்கிடையில், கடந்த ஆறு மாதமாக வாரச்சந்தை செயல்படாது சுங்கம் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் சந்தை செயல்படாத காலங்களில் ஒப்புதல் தொகையைக் குறைக்குமாறு நகராட்சிகள் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் பழைய இடத்துக்கு தினசரி சந்தை மாற்றம்!