ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை அடுத்துள்ள ஆசனூர் அருகே சாலை வளைவில் திரும்பிய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் பகுதியான சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மைசூரு செல்வதற்காக சத்தியமங்கலம்- மைசூரு சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையை கடந்து ஆசனூர் அருகே சீவக்காய் பள்ளம் என்ற இடத்திலுள்ள சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர்தப்பினார். சாலையோரத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து பற்றி ஆசனூர் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தலைவா - தீம் மியூசிக்குடன் வெளியான தர்பார் மோஷன் போஸ்டர்