ETV Bharat / city

பாலத்தில் விரிசல்: வடிகால் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை - அவதி

வெண்டிபாளையம் பகுதியில் புதிய நுழைவு பாலம் சுவற்றிலிருந்து நீரை வெளியே வருவதால், வடிகால் குழாய் அமைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடிகால் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

author img

By

Published : Nov 8, 2021, 9:07 PM IST

ஈரோடு: வெண்டிபாளையம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே கடவுப்பாதை இருந்து வந்தது. இந்த ரயில்வே கடவுப்பாதை வழியாகத் தினமும் ஏராளமான சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் கடந்து சென்று வந்தன.

ரயில்வே நுழைவுப் பாலம்

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அந்தப் பாதை சிதிலமடைந்ததையடுத்து, பல லட்சம் மதிப்புள்ள ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்தப் பணி தற்போது வரையிலும், முழுமை பெறாமல் உள்ளது.

புதிய நுழைவு பாலத்தில் சுவற்றில் இருந்து தண்ணீர் வெளியே வருவதால் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது காரணமாக, ரயில்வே நிர்வாகம் இந்த நுழைவு பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து விட்ட நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் ரயில்வே நுழைவு பாலத்திற்குள் ஆளுயரம் வரை தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலத்தில் விரிசல்

இதனால் நுழைவுப் பாலத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் நுழைவுப்பாலத்தின் பணியை இன்று வரை சரி வர முடிக்காமல், பொதுமக்களின் தேவைக்காக அவசர அவசரமாக ரயில்வே நிர்வாகம் பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவந்தது.

ஆனால், இந்த ரயில்வே நுழைவுப் பாலத்தில் நீர் தேங்கிக் கொண்டே இருப்பதால், பாலத்தில் ஆங்காங்கே சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு நீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

எனவே, நுழைவுப் பாலத்தை முழுமையாகச் சீரமைத்து நீர் தேங்காத அளவிற்கு, வடிகால் குழாய் அமைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.