ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக டி. ஆனந்தன் பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக ஈரோட்டைச் சேர்ந்த பெண் பணியாற்றி வந்தார்.
இப்பெண்ணிடம் தலைமை அரசு மருத்துவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையல் கடந்த மார்ச் 22ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பணியாளர், கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மகளில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மார்ச் 30ஆம் தேதி மருத்துவர் ஆனந்தன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துணை இணை இயக்குநர் ஜி.எஸ். கோமதி கூறுகையில், 'இப்புகார் தொடர்பாக இரு தரப்பினரிடையே விசாரித்து அறிக்கை தாக்கல்செய்ய ஆறு பேர் கொண்ட விசாகா கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாகாக கமிட்டியினர் வழக்கை விசாரித்து, அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்வார்கள். அதன்பிறகு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சமர்ப்பிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஊர் கெத்தை காட்டுவதில் போட்டி - பேராசிரியர்கள் எதிரே மாணவர்கள் மோதல்'