ETV Bharat / city

தண்ணீரின் தேவையை உணர்த்தும் விழிப்புணர்வு பேரணி..!

ஈரோடு: கவுந்தப்பாடியில் தனியார் கலைக்கல்லூரியும், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையும் இணைந்து நடத்திய நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தண்ணீரின் தேவையை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி
author img

By

Published : Jun 26, 2019, 11:20 PM IST

தனியார் கலைக்கல்லூரியும், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையும் இணைந்து நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இதில், ‘நீர் விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்க, நாமும், நம்மைச் சார்ந்தவர்களையும், ஊக்கப்படுத்துதல் வேண்டும். மேற்கூரை மழைநீர் சேமிப்பு மற்றும் சேமிப்பு முறைகளைக் கடைப்பிடிக்க ஊக்கப்படுத்துதல் வேண்டும். அவரவர் பகுதிகளில் மரம் வளர்த்தல் காடு வளர்த்தலுக்கு ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களிடம் நீர் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளவும் மேம்படுத்தவும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். தூய நீரைச் சேமிக்கவும் பயன்படுத்திய நீரைச் சுத்தம் செய்து தொடர்ந்து பல்வேறு வகைகளில் உபயோகிக்கவும் உரியத் திட்டங்களை ஊக்குவித்தல் வேண்டும்’ போன்ற விழிப்புணர்வு பரப்புரைகள் இடம்பெற்றன.

கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட தண்ணீரின் தேவையை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி

மேலும், குழாய் இணைப்புகளில் நீர் வடியாமல் இருக்க பரிசோதித்தல் கால்வாய்களைக் கட்டுமானம் செய்தல் மற்றும் வாய்க்கால்களில் நீர் ஊடுருவி வீணாகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் சுத்தமான நீரைச் சொட்டுநீர் தெளிப்பான்கள் மூலம் பாசனம் செய்தல், ஆகியவை விளை நிலங்களில் நீரைச் சேமிப்பதற்கான வழிமுறைகள் என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முழக்கங்கள் எழுப்பியும் பேரணியில் ஈடுபட்டனர்.

Intro:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் தனியார் கலைக்கல்லூரியும் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையும் இணைங்து நடத்திய நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடியில் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தனியார் கலைக்கல்லூரியும் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையும் இணைந்து நடத்திய பேரணியில் நீர் சேமிப்பு குறித்து நீர் விழிப்புணர்வுள்ள சமூதாயத்தை உருவாக்க நாமும் நம்மை சார்ந்தவர்களையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும் மேற்கூரை மழைநீர் சேமிப்பு மற்றும் சேமிப்பு முறைகளைக் கடைபிடிக்க ஊக்கப்படுத்துதல் வேண்டும் அவரவர் பகுதிகளில் மரம் வளர்த்தல் காடு வளர்த்தலுக்கு ஊக்கப்படுத்துதல் வேண்டும் பள்ளிகளில் மாணவகர்களிடம் நீர் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளவும் மேம்படுத்தவும் ஊக்கப்படுத்துதல் வேண்டும் தூய நீரை சேமிக்கவும் பயன்படுத்திய நீரை சுத்தம் செய்து தொடர்ந்து பல்வேறு வகைகளில் உபயோகிக்கவும் உரிய திட்டங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் சமுதாயத்தில் நீரை சேமிப்பதற்கான வழிமுறைகள் எனவும் பயிர்களின் வளர்ச்சிக்கேற்ப நீர்த்தேவைகளை கணக்கிட்டு வழங்குதல் பயிர் மண் மற்றும் வானிலைக்கேற்ப பாசன முறைகளைத் தேர்ந்தொடுத்தல் பாசன அமைப்புகளை நன்றாக பராமரிப்பு செய்திடல் பாசன நேரங்களை அறிவித்திட தேவையான கருவிகளைப் பயன்படுத்தல் கடைமடை நீரை மறுசுழற்சி முறையில் பாசனத்திற்கு பயன்படுத்துதல் நிலத்தை முறையாக சமப்படுத்துதல் குழாய் இணைப்புகளில் நீர் வடியாமல் இருக்க பரிசோதித்தல் கால்வாய்களை கட்டுமானம் செய்தல் மற்றும் வாய்க்கால்களில் நீர் ஊடுருவி வீணாகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் சுத்தமான நீரை சொட்டுநீர் தெளிப்பான்கள் மூலம் பாசனம் செய்தல் களைச்செடிகள் வளர்ந்து பாசன நீரை எடுத்துக்கொள்ளமால் பார்த்துக்கொள்ளுதல் கால்வாய்களில் உடைப்பில்லாமல் கவனித்துக்கொள்ளதல் ஆகியவை விளை நிலங்களில் நீரை சேமிப்பதற்கான வழிமுறைகள் என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோஷங்கள் எழுப்பியும் பேரணியில் ஈடுபட்டனர். பேரணி கவுந்தபாடி கீழ்பாவனி முறைநீர் பாசன சபையில் தொடங்கி நால்ரோடு கடைவீதி பேருந்து நிலையம் வழியாக ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் முடிவுற்றது. முன்னதாக பேரணியை நிர்மலாதேவி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கீழ்பவானி முறைநீர் பாசன சபை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.

Body:TN_ERD_04_26_SATHY_WATER_SAVE_VIS_TN10009Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.