ஈரோட்டிலிருந்து சென்னை செல்வதற்காக 40 பயணிகள் கே.பி.என். சொகுசுப் பேருந்தில் முன்பதிவு செய்திருந்தனர். அதுமட்டுமின்றி, படுக்கை வசதியுடைய பேருந்துக்காக ரூ. 765 கட்டணத்தை நேற்று இரவு 9.45 மணிக்கு செலுத்தினர். ஆனால், 11 மணியை கடந்தும் பேருந்து வரவில்லை.
இதனால், படுக்கை வசதி கொண்ட பேருந்துக்கு பதிலாக இருக்கை வசதி கொண்ட பேருந்தில் செல்லுமாறு பயணிகளிடம் அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்தியதால், இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல் துறையினர், கே.பி.என். நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து, வாக்குவாதத்தை பயணிகள் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் - மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம்