தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்றுப் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதில் பாதிப்பு குறைந்த பகுதிகளில் மளிகைக் கடைகள், பழுது நீக்கும் கடைகள் தவிர மதுபான கடைகளுக்கும் அனுமதி அளித்தது.
தமிழ்நாட்டில் கரோனா பரவிவரும் சூழலில் மதுபான கடைகள் திறக்கப்படாததால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறவழி போராட்டதில் ஈடுபட தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையதில் கரோனா காலத்தில் மதுக்கடைகளை திறந்த தமிழ்நாடு அரசை கண்டித்தும், நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக்முகைதீன் தலைமையில் வாய்க்கால்ரோடு, வடக்கு வீதி,பச்சமலை,சீதா லட்சுமி புரம், உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பாமகவினர் வீடுகளின் முன்பு சமூக இடைவெளியுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - அன்புமணி ராமதாஸ் அறப்போராட்டம்