ETV Bharat / city

சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரிக்கை - ஈரோடு மாவட்டச் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே உள்ள காவல் துறை சோதனைச்சாவடியில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்கள், ஓராண்டாகியும் பொருத்தப்படாததால் காவலர்கள் சிரமப்படுவதால், மீண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மக்கள் கோரிக்கை

author img

By

Published : Aug 4, 2021, 9:44 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி, டாணாபுதூரில் காவல் துறை சோதனைச்சாவடி உள்ளது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட எல்லையான இங்கு 24 மணி நேரமும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்கள், வருபவர்கள் பெயர் விபரங்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனர். விபத்துகள் ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்கள், குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் சோதனைச்சாவடியின் நான்கு திசைகளிலும் இரும்புக் கம்பங்கள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மக்கள் கோரிக்கை

இங்கு பதிவாகும் காட்சிகள் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றபோது, சோதனைச்சாவடி அருகே சாலையோரம் இருந்த இரும்புக் கம்பங்கள், சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன.

சிசிடிவி கேமராக்கள் பொருத்த மக்கள் கோரிக்கை

சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் நான்கு மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடி பகுதியில் குற்ற சம்பவங்கள், வாகன திருட்டு, விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச்செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாதநிலை உள்ளது.

சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த காவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.