ETV Bharat / city

ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனை

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) குழுவினர் நேற்று (ஜூலை 26)இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இரவில்
ஈரோட்டில் இரவில் அதிரடி சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை
author img

By

Published : Jul 27, 2022, 9:23 AM IST

Updated : Jul 27, 2022, 9:51 AM IST

ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் இஸ்லாமியர் வசிக்கும் வீட்டில் நேற்று (ஜூலை 26)மாலை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து வீட்டிலிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வீட்டிலிருந்த தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டு ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றினர்.

ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

இதனையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் துவக்கி வைக்கத் தமிழ்நாடு வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ. குழுவினர் ஈரோட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் திலக் நகரில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரைக் கடந்த 24ம் தேதி காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி முனியப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பிரதமர் மோடி சென்னை வருகை - 22,000 போலீசார் குவிப்பு,

Last Updated : Jul 27, 2022, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.