ETV Bharat / city

அக்கா மகளை பெண் கேட்டு தொந்தரவு செய்த தம்பி - அடித்துக் கொன்ற அக்கா

author img

By

Published : Dec 17, 2021, 10:42 AM IST

ஈரோட்டில் மகளை பெண் கேட்டு தொந்தரவு செய்த தம்பியை அக்கா, உள்ளிட்ட மூவர் அடித்துக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பி அடித்துக் கொலை
தம்பி அடித்துக் கொலை

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி அருகே குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (30). தார்சாலை அமைக்கும் கூலி தொழிலாளியாக பணிபுரிந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி குரும்பபாளையத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் இரவு தூங்கிய நிலையில் காலை வீட்டில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில் அண்ணாமலையின் சகோதரி ராணி, அவரது கணவர் சுப்பிரமணி, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் கதிர்வேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் அண்ணாமலை உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் விண்ணப்பள்ளி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த மூவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட அண்ணாமலையின் சகோதரி ராணி் மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டு அண்ணமாலை தொந்தரவு செய்த வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் தனது மகளை ராணி திருமணம் செய்து வைத்துவிட்டார்.

இதுதொடர்பான பிரச்சினையில் ராணி உள்ளிட்ட 3 பேர் அண்ணாமலையை அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.