ETV Bharat / city

டாஸ்மாக் கடையில் சட்டவிரோத மது விற்பனைப் புகார் - அதிகாரிகள் திடீர் ஆய்வு! - அதிகாரிகள் திடீர் ஆய்வு!

ஈரோடு: அரசு மதுபானக்கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மதுபானக் கடை
ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மதுபானக் கடை
author img

By

Published : May 13, 2020, 9:25 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து தொழில்களுக்குத் தளர்வு ஏற்பட்டதுடன் கடந்த 7ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் விற்பனை தொடங்கியது. 7ஆம் தேதி தொடங்கிய அரசு மதுபானக் கடை விற்பனை 8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஆணையால், ஊரடங்கு உத்தரவுக் காலம் முடியும் வரை உடனடியாக மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 8ஆம் தேதி 4 மணியுடன் அரசு மதுபானக் கடையில் விற்பனை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள அரசு மதுபானக் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பில்லாத அரசு மதுபானக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானப் பாட்டில்கள் இரவோடு இரவாக வேற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டதாகக் கூறிவிட்டு, ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மதுபானக் கடையில் சட்டவிரோதமாக தொடர்ந்து மது விற்பனை செய்யப்பட்டதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

புகாரின் அடிப்படையில் அரசு மதுபானக் கடைகளின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட குழுவினர், அரசு மதுபானக் கடையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின் போது மாவட்டத்திலுள்ள ஏனைய அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடைக்கு மட்டும் சீல் வைக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானப் பாட்டில்களுக்கும் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இருப்பு விவரமும் சரி பார்க்கப்பட்டது.

பின், அந்தக் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரை தனியறையில் வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்து, அரசின் முடிவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடையில் விற்பனை நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததற்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்ட நிலையில், ஒரு கடையில் சீல் வைக்கப்படாமல் விற்பனை நடைபெற்றிருப்பதாக கூறப்படும் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

சட்டவிரோதமாக பதுக்கியிருந்த 2,160 மதுபாட்டில்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.