ETV Bharat / city

யானை, புலிகளிடமிருந்து பழங்குடியின மக்களை காக்க சிறப்பு பூஜை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மலைக்கிராமத்தில் வாழும் மக்களை புலி, யானைகளிடமிருந்து பாதுகாத்து அருள்புரிய வேண்டி அங்குள்ள ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் புலி, யானை உருவ பொம்மைக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீ கும்பேஸ்வரசாமி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

kumbeswarar temple festival at erode
ஸ்ரீ கும்பேஸ்வரசாமி கோயிலில் தேர்த்திருவிழா
author img

By

Published : Feb 18, 2022, 11:43 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைக்கிராமத்தில் ஸ்ரீ கும்பேஸ்வரசாமி கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் வாழும் மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், யானை, புலி ஆகிய விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாத்து அருள்புரிய வேண்டியும் விரதம் இருந்து இக்கோயில் குண்டம் திருவிழா தொடங்கியது.

ஸ்ரீ கும்பேஸ்வரசாமி கோயிலில் தேர்த்திருவிழா

விழாவையொட்டி, சித்தூர் கும்பேஸ்வரசுவாமி, ஆலமலை பிரம்மதீஸ்வரர் ஆகிய சுவாமிகளை அழைத்து வருதல் நிகழ்ச்சியும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த தேர்த்திருவிழாவில் பக்தர்கள் வாழைப்பழங்களை வீசி வழிபட்டனர். இந்தத் திருவிழாவில் ஆசனூர், ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவர்நத்தம், கேர்மாளம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஆயிரமாண்டுகள் பழமையான அரளிப்பாறை மஞ்சுவிரட்டு விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.