ஈரோடு: திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, கடுமையாக உழைக்கும். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக சட்டப்பேரவையில் முழுமையாக குரல் கொடுப்போம். மக்களுக்கு சேவை செய்யவும், வாக்குகள் அதிகமாகப் பெறவுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்தோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் கே. பழனிசாமி அறிவித்த திட்டங்களால், திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடும் தொகுதிகளும், அதன் வேட்பாளர்களும்
- திருச்செங்கோடு - கொ.ம.தே கவின் பொதுச்செயலாளர் - ஈ. ஆர் ஈஸ்வரன்
- பெருந்துறை - கொ.ம.தே கட்சியின் மாநில பொருளாளர் - கே.கே.சி பாலு
- சூலூர் - கொ.ம.தே.க கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் - பிரிமியர் செல்வம் (எ) காளிச்சாமி