ETV Bharat / city

இ பாஸ் இல்லாமல் வரும் கர்நாடக வாகனங்கள்: கட்டுப்படுத்த கோரிக்கை - erode news

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, வெளிமாநில வாகனங்கள் நுழைய இ-பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. எனினும் மாநில எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்களை தணிக்கை செய்ய அலுவலர்கள் இல்லாததால், வெளிமாநில வாகனங்கள் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

issue on interstate epass between karnataka and tamilnadu

author img

By

Published : Apr 11, 2021, 7:10 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழ்நாடு - கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனை சாவடியில் வெளிமாநில வாகனங்கள் எளிதாக நுழைகின்றன.

இன்று முதல் வெளிமாநில வாகனங்கள் நுழைய இ-பாஸ் கட்டாயம் என்பதால், பண்ணாரி சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் முகாமிட்டு, வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பண்ணாரி சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் மட்டுமே வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத் துறையினர் வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை கண்காணிப்பதில் அலட்சியமாக உள்ளதால், கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தேர்தல் களத்தின் சூடு தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் நுழைவதற்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.