ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் ஈஸ்வரன் என்பவர் ஐயன் மெஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.. இந்த ஹோட்டலுக்கு சூரம்பட்டி யைச் சேர்ந்த முஹம்மது ஆசிக் (22) மற்றும் ரசூல் (21) இருவரும் கடந்த 27 அன்று இரவு சாப்பிட சென்றுள்ளனர்.
இவர்கள், கொத்து பரோட்டா கேட்டுள்ளனர். தோசை தான் போட முடியும் என ஈஸ்வரன் கூறவே நாங்கள் யார் தெரியுமா, போலீஸ்காரன் தம்பி, என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில், ஆசிக் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஆசிக் அளித்த தகவலில் பேரில் சுரம்பட்டி சங்கு நகரைச் சேர்ந்த உமர் பாருக் (24), ஆயுதப்படை காவலராக ஈரோட்டில் பணியாற்றி வருகிறார். இவரும் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரும் சம்பவ இடத்துக்கு வந்து ஈஸ்வரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பெயரில் வீரப்பன் சத்திரம் காவல்துறையினர் முகம்மது ஆசிக், ரசூல், கார்த்தி, உமர் பாரூக் ஆகியோர் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்- அண்ணாமலை