ETV Bharat / city

ஈரோட்டில் காலாவதியான உணவுகளைப்பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்

ஈரோட்டில் காலாவதியான உணவுகளை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
author img

By

Published : Aug 24, 2022, 10:27 PM IST

ஈரோடு: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் நவாஸ் வேணா தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்களில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சோதனை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று(ஆக.24) ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செல்வம், அருண்குமார், ஏட்டிகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈரோடு மாநகரப்பகுதியில் பல்வேறு உணவகங்கள், ஹோட்டல்களில் சென்று சோதனை செய்தனர். அப்போது குமரன் குட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது நேற்று சமைத்து வைக்கப்பட்டிருந்த இறைச்சி கறிகள், கிரில் சிக்கன், புரோட்டா ஆகியவை இன்று மீண்டும் பயன்படுத்துவதற்காக ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மூன்று கிலோ சிக்கன், 20 பரோட்டா, காலாவதியான 3 காளான் பாக்கெட்டுகள் ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சிக்கன் குழம்பு சோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் காலாவதியான உணவுகளைப்பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்

இதைத்தொடர்ந்து சோலார், மொடக்குறிச்சியில் உள்ள உணவகங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அரிய வகை புலாசா மீன் 19,000 ரூபாய்க்கு ஏலம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.