ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, சம்பங்கி ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு விளையும் மல்லிகை பூவுக்கு கேரளா, கர்நாடகாவில் வரவேற்பு இருப்பதால் வெளி மாநில வியாபாரிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
சென்ற சில நாள்களாக சத்தியமங்கலம் பகுதியில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் பனிப்பொழிவு நீடிப்பதால் பூக்களில் இலைப்புழு தாக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது.
தினந்தோறும் 10 டன் மல்லிகை, சம்பங்கி உற்பத்தி ஆன நிலையில் தற்போது வெறும் 2 டன் பூவாக சரிந்தது.
சம்பங்கி 5 டன்னிலிருந்து ஒரு டன் ஆக சரிந்தது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை கிலோ ஆயிரத்து 750 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் ரூபாய் 10க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ 100 ரூபாய்க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: வாடாமல்லி பூ விலை சரிவு – விவசாயிகள் கவலை