ETV Bharat / city

திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தக்கோரி விவசாயிகள் போராட்டம் - திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்

திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி விவசாயிகள், வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரவை உடனடியாக அமல்படுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தக்கோரி விவசாயிகள் போராட்டம்

author img

By

Published : Apr 10, 2022, 11:10 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களில் சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதாகவும், இதனால் வாகன போக்குவரத்தை தடைசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 10ஆம் தேதி திம்பம் மலைப்பாதை இரவுநேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து விவசாயிகள் சங்கத்தினர் ரிட் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்டபிறகு ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் 16.2 டன்னுக்கு குறைவாக உள்ள காய்கறி லாரிகள் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து உள்ளூர் மக்கள் நேற்று(ஏப். 10) இரவு முதல் காய்கறி வாகனங்கள் இயக்குவதற்கு தயாராக இருந்தனர்.

திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தக்கோரி விவசாயிகள் போராட்டம்

பேச்சுவார்த்தை: இந்நிலையில் இரு மாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில், கர்நாடகத்தில் இருந்துவரும் வாகனங்களை வனத்துறையினர் அனுமதிக்க மாட்டோம் என்றும், மாலை 6 மணிக்கு மேல் பிக்கப், மினி லாரி செல்லக்கூடாது என வனத்துறை மூலம் தாளவாடி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தாளவாடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன் மற்றும் சாம்ராஜ்நகர் விவசாய சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த வனச்சரகர் சிவக்குமார், தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு, வட்டாட்சியர் உமாமகேஷ்வரன் ஆகியோர் விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 10 சக்கரம் வாகனம் மற்றும் 16.2 டன்னுள்ள வாகனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் முறையிட்டனர்.

இதையடுத்து இரவு நேரத்தில் பிக்கப், மினி லாரி உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 'மணல் கடத்தல் வழக்கில் கனிமவளத் துறை உதவி இயக்குநர் கைது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.