ஈரோடு சம்பத் நகரில் மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளி விடுமுறையை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மே 2ஆம் தேதி தொடங்கியது. இந்த வகுப்பு வரும் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, சிலம்பாட்டம், ஓவியம் வரைதல் போன்றவை பற்றி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று கோவை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிக் கழகத்தின் சார்பில் ராமண சரண் என்பவர் இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள பட்டாம்பூச்சிகளின் வகைகள் குறித்து வகுப்பு நடத்தினார்.
இதில் இந்தியாவில் 1300 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாகவும், அவற்றில் 300வகையான பட்டாம்பூச்சிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாகவும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு தெளிபடுத்தப்பட்டது.