ETV Bharat / city

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா நிறைவு - erode pannariamman temple

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா நிறைபெற்றது.

erode-pannariyamman-temple-gundam-festival-2022-ends

author img

By

Published : Mar 29, 2022, 11:08 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மார்ச் 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.

குண்டம் விழா நிறைவு

அதைத்தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி குண்டம் விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் மிதித்தனர். இதைத்தொடர்ந்து தினந்தோறும் கோயிலில் புஷ்ப ரத ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தன. இந்த நிலையில் நேற்று (மார்ச் 28) மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவு பெற்றது.

இதற்காக நேற்றிரவு முதல் அதிகாலை வரை பூஜை நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொழில்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடந்துவருவதால், அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை கூட்டம் குறைந்து காணப்பட்டது. இருப்பினும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பேருந்துகள் மூலம் பண்ணாரியம்மனை வழிபட்டுசென்றனர்.

இதையும் படிங்க: பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.