மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் உழவர்களின் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் இன்று (டிச. 08) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
இதனால் இன்று காலைமுதல் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதேபோல் கர்நாடக மாநிலத்திலிருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் சரக்கு வாகனங்களும் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது. முழு அடைப்பு காரணமாக இரு மாநில எல்லையில் வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!