ETV Bharat / city

போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி கைது! - ஈரோடு மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள், முகவரிகள் மூலம், மூன்று வங்கிகளில், வாகனக் கடன், தனிநபர் கடன் என, 48 லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகியிருந்த தம்பதியினரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தம்பதி கைது
தம்பதி கைது
author img

By

Published : Nov 30, 2020, 4:15 AM IST

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியினர் கார்த்திக், ராதிகா. இவர்கள், பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை நடத்துவதாகவும், தங்களுக்கு வாகனக் கடன், தனி நபர் கடன் வேண்டுமென்று, ஈரோட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகளை அணுகியுள்ளனர். அந்த வங்கிகளில், விண்ணப்பங்கள் வழங்கி, இரண்டு கார்கள், தனிநபர் கடன் என மொத்தம் 48 லட்சம் ரூபாய் கடனுதவிப் பெற்றுள்ளனர்.

கடன்களைப் பெற்ற கார்த்திக், ராதிகா தம்பதியினர், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை, வட்டித் தொகைகளை மிகவும் காலதாமதம் செய்து வந்ததால் வங்கி நிர்வாகத்தினர் அவர்கள் கொடுத்த முகவரிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அந்த முகவரிகள் போலியானது என்பது தெரியவந்தது. பின்னர், வாகனக் கடன், தனிநபர் கடன் பெற அவர்கள் வழங்கிய ஆவணங்களைச் சோதனை செய்ததில் அதுவும் போலியானது என்பது தெரிய வந்தது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர் போலி முகவரி, போலி ஆவணங்கள் வழங்கி சாமர்த்தியமாக கடன்களைப் பெற்று வங்கிகளையே ஏமாற்றிய தம்பதியர் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையின் பரிந்துரை பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வங்கிகளை ஏமாற்றி, 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் கோயம்புத்தூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற குற்றப்பிரிவு காவல்துறையினர், கார்த்திக் ராதிகா இருவரையும் கைது செய்து, ஈரோடு குற்றப்பிரிவு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து, வங்கிகள் மூலம் பெற்ற இரண்டு புதிய கார்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களது வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றையும் பரிசோதித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.