ETV Bharat / city

விரைவில் பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் சேகர் பாபு - Rajagopuram

விரைவில் பண்ணாரி அம்மன் கோயிலில் 12 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Sep 7, 2022, 10:35 PM IST

ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக கோயிலில் பண்ணாரி அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் சேகர் பாபு, இதைத்தொடர்ந்து கோயில் முன்பு புதியதாக ரூபாய் 12 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவது குறித்தான வரைபடத்தை பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் புதியதாக கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், 'இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு 12 கோடி ரூபாய் செலவில் 9 நிலை ராஜகோபுரம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டார். விரைவில் இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி கோயிலைச் சுற்றி 90 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் மருத்துவமனை வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் முதலமைச்சர் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

ஏற்கெனவே இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 4 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள ஆறு கல்லூரிகளும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் தொந்தரவு இருப்பதால் பக்தர்கள் இரவு 9 மணிக்கு மேல் பண்ணாரி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

விரைவில் பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் சேகர் பாபு

இனிவரும் காலங்களில் பண்ணாரி அம்மன் கோயிலில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.