ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 இடங்களில் ரூ. 24.93. கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் மாநகராட்சி பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில், பூங்காங்கள் அமைத்து பராமரிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சியில் உள்ள 60 வட்டங்களிலும் எந்ததெந்த பகுதியில் காலியிடம் உள்ளன, அங்கு உள்ள மக்கள் தொகை ஆகிய விவரங்களைச் சேகரித்து, பூங்கா அமைக்க 31 இடங்கள் தேர்வு செய்யபட்டன.
பின்னர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்று, பூங்கா அமைக்க ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதில் அருள்வேலவன் நகர், டெலிபோன் நகர் உள்ளிட்ட 31 இடங்களில் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதியில் கட்டப்பட்டு உள்ள சிறுவர் பூங்கா கட்டி, முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் அந்தப் பகுதி சிறுவர், சிறுமியர் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்க, மிகுந்த சிரமப்படுவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
''கொலைகாரப்பாவிக்கு பட்டம் கொடுத்து, பரிசு கொடுத்திருக்கிறார்கள்'' - கோத்தபயவை சாடிய வைகோ