ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ. பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்றிரவு (ஆகஸ்ட் 19) தான் வேலை செய்யும் இடத்தின் அருகே உள்ள தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதன் காரணமாக அர்ஜூன் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் உடல் கருகி உயிரிழந்தார். இதனிடையே அக்கம்பத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் எந்த பயனுமில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட தகவலில், இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லிஃப்டில் சிக்கிய பத்து பேர்... அரைமணி நேரத்திற்கு பின் மீட்பு... கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு