திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி, கடந்த நான்கு நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, அவர் சத்தியமங்கலம், தாளவாடி, கோபிசெட்டிபாளையம், நம்பியூா், கடத்தூா் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மக்களை சந்தித்து பேசினார்.
கோபிசெட்டிபாளயைத்தில் நடந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பேசிய கனிமொழி, ” ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது எடப்பாடியிடம் கை கட்டி நிற்கிறார். கல்வித்துறையில் அவருக்கு தெரியாமலே அறிவிப்புகள் வருகின்றன. பள்ளிகள் திறப்பு குறித்து செங்கோட்டையன் அறிவித்தவுடனேயே, திமுக காட்டிய எதிர்ப்பால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போயுள்ளது ” என்றார்.
இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் அதிகளவில் ஆட்களை திரட்டி, முகக்கவசம் இன்றி தொற்று பரவும் வகையில் கூட்டம் கூட்டியதாக, திமுக ஒன்றியச் செயலாளர்கள், ஊராட்சி, நகரச் செயலாளர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதையும் படிங்க: '2ஜி வழக்கில் மு.க.ஸ்டாலின் சிக்குவார்' - முதலமைச்சர் ஆரூடம்