ETV Bharat / city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெங்குமரஹாடா மக்கள் சாலைமறியல்

author img

By

Published : Nov 16, 2019, 3:19 AM IST

ஈரோடு : பேருந்து வசதி, உயர்மட்ட பாலம் உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றக் கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

protest

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் இருந்து 30 கிமீ தூரத்தில் அடர்வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா கிராமம். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரியில் இருந்து தினந்தோறும் பவானிசாகர் வழியாக இருபேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் இக்கிராமத்தில் இருந்து பவானிசாகர், ஈரோடு, ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்ல மக்கள் பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனர். குறிப்பாக பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா வழித்தடத்தில் 20 தாழ்வான பள்ளங்களை கடந்து வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்நிலையில் பவானிசாகர் அணை தற்போது முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அணைநீர் பள்ளங்களில் புகுந்து 3 அடி உயரம் வரை தேங்கியுள்ளது. இதனால் பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு தினங்களுக்கு முன்பு தண்ணீர் தேங்கியுள்ள ஊசி பள்ளம் என்ற இடத்தை பேருந்து ஒன்று கடந்த போது தண்ணீரில் சிக்கி பழுதாகி நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.

இதனால் பள்ளங்களில் அணைநீர் வடியும் அரசு பேருந்துகள் இயக்க இயலாது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் மருத்துவ வசதி கேட்டு அக்கிராமத்த்சை சேர்நத 100 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மக்கள் 4 லாரிகளில் தெங்குமரஹாடாவில் இருந்து வந்து சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள தெங்குமரஹாடா கிராம மக்கள்

இதனால் சத்தியமங்கலம் - கோபி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வனஅலுவலர் அருண்லால் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க :தரமற்ற சாலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Intro:Body:tn_erd_04_sathy_salai_marial_vis_tn10009

பேருந்து போக்குவரத்து, சாலை வசதி மற்றும் உயர்மட்டம் பாலம் கோரி தெங்குமரஹாடா மக்கள் சாலைமறியல் போராட்டம்

சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்லும் வனச்சாலையில் பவானிசாகர் அணை நீர் தேங்கியுள்ளதால் அரசு பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டன. இதனால் பேருந்து வசதி, உயர்மட்டபாலம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தெங்குமராஹாவில் இருந்து லாரி மூலம் சத்தியமங்கலம் வந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரில் இருந்து 30 கிமீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா கிராமம். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரியில் இருந்து தினந்தோறும் பவானிசாகர் வழியாக இரு பேருந்துகள் தேங்குமரஹாடாவுக்கு இயக்கப்பட்டன. இக்கிராமத்தில் இருந்து பவானிசாகர், ஈரோடு, ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்ல பேருந்தை நம்பியுள்ளனர். பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா வழித்தடத்தில் உள்ள தாழ்வான 20 பள்ளங்களை கடந்து வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் பவானிசாகர் அண தற்போது 105 முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அணைநீர் பள்ளங்களில் புகுந்து 3 அடி உயரம் வரை தேங்கியுள்ளது. 4 தினங்களுக்கு முன்பு தண்ணீர் தேங்கியுள்ள ஊசி பள்ளம் என்ற இடத்தில் பேருந்து கடந்த போது தண்ணீரில் சிக்கி பழுதாகி நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. இதனால் பள்ளங்களில் அணைநீர் வடியும் அரசு பேருந்துகள் இயக்க இயலாது என இரு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதநால்அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் மருத்துவ வசதி கேட்டு அக்கிராமத்த்சை சேர்நத 100 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மக்கள் 4 லாரிகளில் வந்து சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக சத்தியமங்கலம் கோபி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த மாவட்ட வனஅலுவலர் அருண்லால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து அரசு பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான சாலை வசதி செய்துதரப்படும், உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து ஊட்டி மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. தெங்குமரஹாடா கிராமமக்கள் தடையின்றி வனத்தின் வழியாக செல்ல வனத்துறை உதவும் என உறுதியளித்தையடுத்து 2 மணிநேரம் நடந்த சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.