ஹைதராபாத்:அண்மையில் அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திரமோடி சென்று வந்த பின்னர் இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்காவின் தேசிய தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானதாக மேலும் வலுப்பெறும் வகையில் இருக்கிறது என்று கூறினார். இந்தியா குறித்து பேசிய அதிபர் பைடன், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சர்வதேச சமூகத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் , உலகின் பல்வேறு பகுதிகளில் எழும் சிக்கலான பேரழிவு விளைவுகளுக்கு தீர்வு காணுவது போன்ற மிகவும் சவாலான சூழல்களுக்கு முன்னணியில் இருந்து இந்தியா செயல்படுகிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு வலுவானது, நெருக்கமானது வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் அளித்து நட்புறவை விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்தியாவின் உத்திப்பூர்வமான தன்னாட்சியின் மீதான நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் இதனை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த நட்புணர்வு இரண்டு நாடுகளுக்கும் அவர்களின் சர்வதேச இலக்குகளை அடைவதை நோக்கிப் பயணிப்பதாக இருக்கும். சிக்கலான மற்றும் எழுச்சி பெறும் தொழிநுட்ப முயற்சியில் இருந்து இந்தியா பலன் பெற்றிருக்கிறது. தவிர அமெரிக்கா ஆயுதங்களில் முதலீடு செய்திருக்கிறது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் உத்தியை மேற்கொள்வதற்கு அமெரிக்கா ஒரு வலுவான கூட்டாளியாக உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய புத்தகத்தில், அமெரிக்க நிச்சயமாக தேவையாக இருக்கிறது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சக்திகளாக திகழும் இந்த நட்பு மேலும் உயரே செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
யுக்ரேன், போலந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றது குறித்து பைடன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது என அமெரிக்கா முடிவாக தீர்மானிக்கும்போது, அது இந்த விவகாரத்தில் இந்தியாவை பேச்சுவார்த்தை நோக்கித் திருப்பும். ஜெலன்ஸ்கியின் எந்த ஒரு வெற்றி என்ற கோரிக்கையையும் புறம் தள்ளும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயும், ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையேயும் இந்தியா நம்பிக்கையான ஒரு பாலமாக மட்டுமே தொடர்ந்து இருக்கும்.
இதையும் படிங்க : "நாளை நமதே" - பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பைடன்!
மாஸ்கோ உடனான டெல்லியின் உறவு ஒரு காலகட்டத்தில் தவறான புரிதலுடன் கூடிய தடையாக இந்தியா-அமெரிக்கா உறவில் நெருக்கமின்மையை ஏற்படுத்தியது. மிக விலை குறைவாக ரஷியாவில் கச்சா எண்ணையைப் பெற்று யுக்ரேன் போருக்கு இந்தியா நிதி உதவி செய்ததாக இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டது. சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும்படி வாஷிங்டன் கோரிக்கை விடுவதன் மூலம் இந்த மிகவும் நெருக்கமான உறவை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறது. இந்தியா, யுக்ரேன் மற்றும் ரஷ்யா தலைமைகளுக்கு இடையே தொடர்ச்சியாக நடைபெறும் சந்திப்புகள் ஒரு தீர்க்கமான தீர்வை நோக்கிய நகர்வை கொண்டிருப்பதை உணர்ந்துகின்றன. சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா பங்கெடுப்பது ஆரம்பத்தில் சீனா, ரஷ்யா ஆதிக்கத்தில் இந்தியா இருப்பதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான அமைப்புகளாகவும் பார்க்கப்பட்டது. சாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடனான உறவை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் உணர்ந்தனர். ஆனால், இப்போது வித்தியாசமான கண்ணோட்டத்தில் இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான அல்லது மேற்கு உலகுக்கு எதிராக அவர்கள் திரும்புவதை இந்தியா அந்த அமைப்புகளில் இருப்பதன் மூலம் தடுக்க முடிகிறது என்பதாக பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவுக்கும் இடையே பரஸ்பரம் தேவை உள்ளது. இந்தியா-அமெரிக்கா உறவில் குவாத்தின் தாக்கம் இணைந்திருக்கிறது. குவாத் அமைப்பு சர்வதேச நலனுக்கானது என பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார். குவாத் அமைப்பு தங்களுக்கு எதிரானது என சீனா உணர்ந்திருக்கிறது. சீன நாளிதழில் அண்மையில் வெளியான தலையங்கத்தில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காகவே அமெரிக்காவுடனும் அதே போன்ற ஆர்வம் கொண்டிருக்கும் நாடுகளோடும் இந்தியா கூட்டணியில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பைடன் மற்றும் அவரது ஆலோசகர்களான வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாட் ஆஸ்டின் ஆகியோர் இந்தியா-அமெரிக்கா உறவை விரும்புகின்றனர். அதே நேரத்தில் இந்த துறைகளில் இருக்கும் சில அதிகாரிகள் இந்தியாவை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் என்று கருதுகின்றனர் அல்லது இந்தியாவின் உள்நாட்டு நல்லுறவை சீர்குலைக்கும் குழுக்களை ஆதரிக்கின்றனர். நீதிக்கான சீக்கியர்களின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனுக்குப் பாதுகாப்பு என்பது ஒரு உதாரணம். பன்னூனின் ‘கொலை முயற்சி என்று அழைக்கப்படுபவை’ மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக அவர் தொடர்ந்த நீதிமன்ற வழக்கு, டெல்லியால் ‘மிக மோசமானது’ என்று விமர்சிக்கப்படுகிறது. உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் கால் பதிக்கும் முன்பு, வெள்ளிமாளிகை அதிகாரிகள், அமெரிக்க சீக்கியர்கள் குழுவை சந்தித்தனர். அமெரிக்க அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர். இந்த அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக காளிஸ்தானை உருவாக்கும் இயக்கத்துக்கு ஆதரவு தருபவர்களாவர். அமெரிக்க சீக்கிய காகஸ் கமிட்டியை சேர்ந்த ப்ரித்பால் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சீக்கிய அமெரிக்கர்களை பாதுகாப்பதில் கண்காணிப்பில் ஈடுபடும் அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்றி. நமது சமூகத்துக்கு மேலும் பாதுகாப்பு வழங்க மேலும் பலவற்றை மேற்கொள்ள அவர்கள் உறுதி மொழியைப் பெறுவோம். சுதந்திரமும் நீதி மட்டுமே என்றும் முதன்மையானது என்று கூறியிருந்தார். சாத்தியமில்லாத காளிஸ்தான் என்பதற்கான ஒரு இயக்கத்துக்கு அமெரிக்க அரசு ஊக்கம் அளிப்பதை போல இது தோற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு ஆண்டுக்கு முன்பு நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பிருக்கிறது என்று கனடாவின் பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.அப்போது இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்தது. பல மாதங்களுக்கு முன்பு கொலையாளிகள் என்று கூறப்படுவோர் கைது செய்யப்பட்டபோதிலும், இது நாள் வரை சிறு ஆதாரம் கூட கிடைக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தின் போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து நிதி உதவி அளிக்கப்பட்டது. அவர்களின் அரசுகள் இதனை அறிந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்து வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடந்த போதும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்போதும் சீக்கிய பிரிவினைவாத இயக்கங்களிடம் காட்டிய அக்கறை போல அமெரிக்க அரசு அதிகாரிகளால் ஒரு போதும் காட்டப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான படங்களுடன் கூடிய தகவல்களை மற்றும் பெயர்கள் கொடுக்கப்பட்ட போதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சான்பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எஃப்பிஐ அதிகாரிகள் இன்னும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நியூயார்க்கில் நடைபெற்ற இதேபோன்ற ஒரு சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, சாக்ரமென்டோவில் உள்ள BAPS ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில், இந்து விரோத வெறுப்பால் இழிவுபடுத்தப்பட்டது.அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமெரிக்க சீக்கிய காக்கஸ் உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பிறகு, இந்த சம்பவங்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் நடைபெறுகின்றன. விசாரணைகள் மெதுவாக நடக்கின்றன அல்லது நடக்கவே இல்லை.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தந்தார். அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், உலக வங்கி தலைவர், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அமெரிக்க நிர்வாகத்தின் உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்தார். ஜனநாயகத்தை நோக்கி செல்லும் புதிய அரசுக்கு அனைத்து உதவிகளும் அளிப்பதாக கூறினர். அப்போது ஆன்டனி பிளிங்கன் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை நிறுத்தும்படி யாரும் கூறவில்லை. வங்கதேசம் அமெரிக்கப் பாதையில் செல்லும் வரை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருக்கும் என்பதுதான் இதில் தெரியவந்திருக்கும் செய்தியாகும். இது இந்திய-வங்கதேச உறவுகளை சீர்குலைக்கும் ஆனால் அது அமெரிக்காவுக்கு கவலை இல்லை. அண்டை நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் எழுச்சி பற்றிய இந்தியாவின் கவலையும் புறக்கணிக்கப்படுகிறது.
ஒப்பந்தம் செய்யப்பட்டபடி முக்கியத்துவம் வாய்ந்த கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்புவதில் நேரிட்டுள்ள தாமதம் விநியோக சங்கியில் நேரிட்ட விஷயமாக இருக்கலாம். அபாச்சி ஹெலிகாப்டர்கள் போன்ற ஒப்பந்த வன்பொருளுக்கான இந்தியாவின் முன்னுரிமையும் குறைக்கப்பட்டது. தலைவர்கள் அமெரிக்கா-இந்தியா உறவை மேம்படுத்த விரும்பினாலும் கூட, அமெரிக்க அதிகாரிகள் மட்டத்தில் உள்ள சிலர் இந்தியா மீது அல்லது அதன் நோக்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை வைப்பதாக இல்லை என்பதையே இந்த செய்தி உணர்த்துகிறது. அமெரிக்காவின் உள்நாட்டில் உள்ள சுதந்திரமான முகமைகள் என்று அழைத்துக் கொள்பவை இந்தியாவின் மனித உரிமைகள் பதிவுகள் மற்றும் ஜனநாயக நம்பிக்கைகள் குறித்து தேவையற்ற மற்றும் போலியான கவலைகளைக் கொண்டிருக்கும் நிலையில் இது மேலும் அதிகரிக்கவே செய்யும். தலைவர்கள் நெருங்கிய உறவுகளையும் மேம்பட்ட உறவுகளையும் விரும்பினாலும், இந்தியாவின் உத்திப்பூர்வ சுயாட்சியைக் கட்டுப்படுத்த சக்கரங்களுக்குள் சக்கரங்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைக் கையாள்வது ஒரு சவாலாக இருக்கும், ஏனெனில் உயர்மட்ட படிநிலைகள் பல மாற்றத்துக்கு உட்படுகின்றன, ஆனால் அவை அப்படியே இருக்கும்.