ETV Bharat / state

செந்தில் பாலாஜி வழக்கு; அரசு தரப்பு சாட்சிக்கு வாரண்ட்! யார் அந்த அதிகாரி? - senthil balaji case - SENTHIL BALAJI CASE

செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறையின் உதவி இயக்குநருக்கு வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 8:48 PM IST

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அப்போது, குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்களை கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இளநீர் கடை அரிவாளால் தேனி இளைஞர் வெட்டிக்கொலை.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

மேலும், அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் பிரிவின் உதவி இயக்குனர் மணிவன்னன் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் ஆஜராகவில்லை என்றும், அதுதொடர்பான மருத்துவ சான்றிதழை கடந்த விசாரணையின் போது தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையின் பதில் மனுவை ஏற்க கூடாது என்றும், வங்கி ஊழியர்களின் விவரங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையடுத்து, அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறை உதவி இயக்குனருக்கு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 4ம் தேதி தள்ளி வைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாகவும் அறிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.