ETV Bharat / city

'அரியர் மாணவர்களின் அரசனே' - முதலமைச்சருக்கு கட்அவுட் வைத்த அரியரியன்ஸ்!

இறுதி ஆண்டு தேர்வைத் தவிர, அரியர் தேர்வுகள் ரத்துசெய்யப்படும் என ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் திருக்குறளை மையப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பதாகைகள் வைத்துள்ள சம்பவம் இணையத்தைக் கவர்ந்துள்ளது.

arrear students thanked tn cm
arrear students thanked tn cm
author img

By

Published : Aug 27, 2020, 2:00 PM IST

ஈரோடு: அரியர் தேர்வை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பதாகைகள் வைத்து மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில் கரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதன் காரணமாக நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு வந்தன.

இவ்வேளையில் மாணவர்கள் நலன் கருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பருவத்தேர்வு தவிர, பிற தேர்வுகள் அனைத்தையும் ரத்துசெய்து முதலமைச்சர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

arrear students thanked tn cm
மாணவர்கள் வைத்த பதாகை

இதனைக் கொண்டாடும் விதமாக ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மையப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கல்லூரி அரியர் மாணவர்கள் பதாகைகள் வைத்தனர். அதில், 'அரியர் மாணவர்களின் அரசனே, நீர் வாழ்க' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்,

எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற குறள் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

'எத்தனை பெரிய அறங்களை அழித்தவருக்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை' என்பதே அக்குறளின் பொருளாகும். இதன்மூலம் 'நாங்கள் உங்களுக்கு உண்மையாக இருப்போம்' என்று அரியர் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.