ETV Bharat / city

நில மோசடி வழக்கில் அதிமுக பிரமுகர் கைது

ஈரோட்டில் மார்க்கெட் நில மோசடி வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முருக சேகர் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
கைது
author img

By

Published : Jan 19, 2022, 10:31 PM IST

ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையானது மிகவும் பழமையானதாகும். மாநகரின் மையப் பகுதியில் உள்ள இச்சந்தைக்குத் தாளவாடி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்பட ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

அங்குள்ள வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாகக்கூறி, ரூபாய் இரண்டு கோடி வரையிலான பணத்தை மோசடி செய்த நிர்வாகிகள் 11 பேரில் வைரவேல், வினோத்குமார், ஆறுமுகம் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வீட்டு மனை வாங்கித் தருவதாக மோசடி

இந்த நிலையில் இன்று நேதாஜி மார்க்கெட் சங்கத்தின் செயலாளரும் அதிமுகவின் கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான முருக சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தையில் நேதாஜி காய்கறி வியாபாரிகள் சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நிலையில் 800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் 350 உறுப்பினர்கள் இடமிருந்து வீட்டு மனை வாங்கித் தருவதாகக் கூறி, தலா 70ஆயிரம் ரூபாய் நிர்வாகிகளால் வசூலிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கிய சங்க நிர்வாகிகள் அவர்களது பெயரிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் நிலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையில் புகார்

உறுப்பினர்களுக்கு நிலம் பிரித்துத் தரப்படாத நிலையில் இது குறித்துப் பல முறை கேட்டும் நிர்வாகிகள் உரிய விளக்கமளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மோசடி சம்பவம் குறித்து சங்க உறுப்பினர்கள் புகார் அளித்தனர்.

காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, செயலாளர் முருக சேகர், பொருளாளர் வைரவேல், துணைத்தலைவர் குணசேகரன், துணை செயலாளர் ஆறுமுகம் உள்பட 11 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.

மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கை

இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் சங்கத்தின் பொருளாளரும் அதிமுக வார்டு செயலாளருமான வைரவேல் அதிமுகவின் பிரதிநிதியின் மகனுமான வினோத்குமார் இருவர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த 11.1.22 அன்று ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையால் நேதாஜி மார்க்கெட் சங்க துணைத் தலைவரும் அதிமுகவின் உறுப்பினருமான ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையால் அதிமுகவின் கருங்கல்பாளையம் பகுதி செயலாளரும் நேதாஜி மார்க்கெட் சங்கத்தின் செயலாளருமான முருக சேகர் என்பவர் இன்று குற்றப்பிரிவு காவல்துறையால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2இல் நீதிபதி காயத்ரி தேவி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்பகுதியில் பரபரப்பு

இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே இவரது புகைப்படத்தை மார்க்கெட் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுவர்களில் போஸ்டர் அடித்து சிலர் ஒட்டினர்.

அதைக் கண்டித்து அதிமுக பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட அதிமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம் - ஸ்டாலின் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.