ETV Bharat / city

'இது ஆ.ராசா அளித்த வாய்ப்பு...எடப்பாடியாருக்கே தாய்மார்களின் வாக்கு' - ஏ.சி.சண்முகம் - AC Shanmugam press meet in Erode

ஈரோடு: தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களின் வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பை ஆ ராசா அளித்துள்ளார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

AC Shanmugam campaign in Erode
AC Shanmugam campaign in Erode
author img

By

Published : Mar 30, 2021, 7:31 AM IST

ஈரோடு மாவட்டம், கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் யுவராஜா, மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ஆதரித்து புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியார்களை சந்தித்துப் பேசிய அவர், "அதிமுக மொத்தம் 190 இடங்களில் வெற்றிபெறும். திமுக படுதோல்வியை சந்திக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முதலமைச்சரின் தாயை தரக்குறைவாக பேசியது அதிமுகவுக்கு வெற்றியை உருவாக்கித்தரும். தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களின் வாக்குகள் முதலமைச்சருக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பை ஆ.ராசா அளித்துள்ளார்.

புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பு
பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவத் தளவாடங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ந்திருக்கிறது. அப்துல் கலாம் கண்ட கனவை மோடி நிறைவேற்றியுள்ளார். செங்குந்தர் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிமுகவுக்கு வாய்ப்பு அளியுங்கள்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.