ETV Bharat / city

பழமைவாய்ந்த கோயில் இரவோடு இரவாக அகற்ற முயற்சி: ஈரோடு அருகே பரபரப்பு - பழமையான மரங்கள் அழிப்பு

ஈரோட்டில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருப்பண்ணசாமி கோயிலை இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்கள் அகற்ற முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பண்ணசாமி கோயில்
கருப்பண்ணசாமி கோயில்
author img

By

Published : Feb 11, 2022, 3:19 PM IST

ஈரோடு: கொல்லம்பாளையம் அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலை நேற்று (பிப்ரவரி 10) நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இயந்திரத்தைப் பயன்படுத்தி முழுமையாக அகற்ற முயற்சித்துள்ளனர்.

பொதுமக்கள் நோட்டம் விடுவதை அறிந்த அந்நபர்கள் முயற்சியைப் பாதியில் விட்டுச் சென்றனர்.

கோயில் இருந்த இடத்தில் அத்துமீறல்

அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பழமைவாய்ந்த கருப்பண்ணசாமி கோயில் இரவோடு இரவாக அகற்றம்
காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் கோயில் இருந்த இடம், குமாரசாமி என்பவருக்குச் சொந்தமானது என்றும், ஓராண்டுக்கு முன்பே கோயில் நிலம் சம்பந்தமாகப் பிரச்சினை இருந்துவருவதும் தெரியவந்தது.
நேற்று நள்ளிரவில் ஆழ்துளை இயந்திரத்தின் சத்தத்திற்கு நடுவே மரம் அறுக்கும் கருவிகளைக் கொண்டு கோயிலில் இருந்த மரங்களை அகற்றியுள்ளனர்.

கோயில் மரங்கள் அழிப்பு

மேலும், அங்கிருந்த சிலைகளை அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் வைத்துவிட்டு பழமைவாய்ந்த வேப்பமரத்தை அகற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குமாரசாமி, அந்த நிலத்துக்குச் சொந்தமான மேலும் சிலரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: வைரமுத்துவின் 50ஆவது ஆண்டு பொன்விழா இலட்சினை: வெளியிட்ட ஸ்டாலின்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.